விருதுநகர் மாவட்டத்தில் ஜன. 16, 26 ஆகிய இரு நாள்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

ஜல்லிக்கட்டின்போது அசம்பாவிதங்கள் நடக்க கூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது;

Update: 2023-01-15 00:15 GMT

பைல் படம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 16 மற்றும் 26ம் தேதிகளில் மதுக்கடைகளை மூட, ஆட்சியர் உத்தரவு..

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், தனியார் பார்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான மதுக்கடைகள் மற்றும் பார்களை, வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்றும், வரும் 26ம் தேதி குடியரசு தினந்தன்றும் திறக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசு உத்தரவை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்பட்டிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் நாள்களில் விடுமுறை...ஜல்லிக்கட்டின்போது அசம்பாவிதங்கள் நடக்க கூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்பசி , மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மூன்று நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News