ராஜபாளையம் அருகே தரைப்பாலம் சேதம் மூன்று கண்மாய் விவசாயிகள் பாதிப்பு:

Heavy Rain Bridge Damaged இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தரைப்பாலம் சேதமடைந்ததால் மூன்று கண்மாய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கார்மெண்ட்ஸ் செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.;

Update: 2023-12-19 08:41 GMT

தரைப்பாலம் கனமழையால் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

 Heavy Rain Bridge Damaged

தமிழகத்தில் இதுவரை தென்மாவட்டங்கள் வரலாற்றில் சந்தித்திராத அளவிற்கு கனமழையால் பெரும்பாதிப்படைந்துள்ளது. காயல்பட்டணத்தில்  அதிக அளவு மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயிலில் பயணிகள் கடந்த 3 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவித்துவந்தனர். அவர்களைச் சுற்றிலும்  ஆழமான தண்ணீர். தனித்தீவில் விட்டதுபோல் தவித்து வந்தவர்களை இன்றுதான்மீட்டுள்ளனர். இதுபோல்  பல பாதிப்புகளை தென்மாவட்டங்கள் சந்தித்துள்ளது மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் இருந்து இனாம் கோவில்பட்டிக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், தற்காலிக பாலம் அமைத்து அப்பகுதியில் இருந்து விவசாயத்திற்கு செல்லக்கூடிய விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தளவாய்புரம் பகுதியில் செயல்படக்கூடிய கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் சென்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் காரணமாக அனைத்து கண்மாயில் நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து தரைப்பாலம் சேதம் அடைந்ததால், இந்த பாதையைக் கடந்து செல்லக்கூடிய பூக்குடி கண்மாய். களந்தூர் கண்மாய் பூவானி கண்மாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500 ஏக்கர் விவசாயத்திற்கு சென்று வரும் விவசாயிகள் விவசாயத்துக்கு தேவையான உரம் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தளவாய்புரம் பகுதியில் செயல்பாடு கூடிய கார்மெண்ட்ஸ் நிறுவனங்களுக்கு இந்த பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பாதையை கடந்து சென்று வந்த நிலையில் இந்த பாதை சேதமடைந்ததால், வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக, மாவட்ட நிர்வாகம் உடைந்த தற்காலிக பாலத்தை சரி செய்து போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News