விருதுநகர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-05-10 09:59 GMT

திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில், காணாமல் போன 150 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு  செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் தங்களது செல்போன்கள் திருடு போனது குறித்தும், காணாமல் போனது குறித்தும் காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் தெரிவித்திருந்தனர். புகார்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள்.

போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி காணாமல் போன செல்போன்களை மீட்டனர். விருதுநகர் மாவட்ட காவல் கோட்டத்தில் ராஜபாளையம் 32, திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் தலா 20, அருப்புக்கோட்டை பகுதியில் 16 என்பது உட்பட 150 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு சுமார் 23 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்போன் உரிமையாளர்கள் 150 பேர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தனிப்படை மற்றும் சைபர் கிரைம் போலீசார் இருந்தனர்.

தங்களது செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில் அதனை வாங்கி சென்றவர்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News