விருதுநகரில் வரும் 26 -ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்;
விருதுநகர் மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.