விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக இல்லம் தேடி கல்வி மையங்கள்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி

Update: 2022-06-04 12:45 GMT

 இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி 

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறினார்.

ராஜபாளையம் 3 வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்களாக பணிபுரிபவர்களுக்கான அடையாள அட்டை, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேணி தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜோதிமணிராஜன் பேசும்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவந்த மாணவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரிடையாகச்கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறினார்.சென்று கற்பித்தல் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 695 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு தேவையான கல்வியை வழங்குவதற்காக மாவட்டத்தில் புதிதாக 296 மையங்கள் செயல்படுவதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News