சாத்தூர் அருகே கிணற்றில் வட மாநில தொழிலாளர் சடலமாக மீட்பு

சாத்தூர் அருகே கிணற்றில் வட மாநில தொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-12-11 07:03 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே,  சின்னகொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாத்தூர் தீயணைப்பு துறையினர் சடலத்தை,  கிணற்றில் இருந்து மீட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

இதில், உயிரிழந்தவர் பெங்களுர் கே. ஜி. எப். மாரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரது மகன் ஓம்பிரகாஷ் (31) என்பது தெரியவந்தது. இவர், ரயில்வே தண்டவாள பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை முதல் பணிக்கு வரவில்லை. தேடியப் பார்த்தபோது, ஓம்பிரகாஷை காணவில்லை என, உடன் வேலைசெய்தவர்கள் தெரிவித்தனர்.

வட மாநிலத்து வாலிபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து, உடன் வேலை செய்த நண்பர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News