விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே, அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசை கண்டித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற கண்டன விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில், அமைப்புசாரா நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் புதிய தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீதா பேசினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.