ராஜபாளையத்தில் 15 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்

Ganesh Procession - ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 15 அடி உயர விநாயகர் சிலை செய்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது

Update: 2022-09-02 00:45 GMT

இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 15 அடி உயரத்தில் விநாயகர் சிலை செய்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

Ganesh Procession -மும்பையில் இருந்து பிரத்தேகமாக விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 15 அடி உயரத்தில் விநாயகர் சிலை செய்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை திருவிழாவை முன்னிட்டு ,மும்பையில் இருந்து பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டசித்தி கணபதி 15 அடி உயரத்திலும் .வல்லவ கணபதி .10 அடி உயரத்திலும்,சுபக் ருது கணபதி .10. அடி.ஹே ரம்ப கணபதி .10 அடி.

உச்சிஷ்ட கணபதி .10 அடி. உயரத்திலும் விநாயகர் சிலைகளுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி,சொற்பொழிவு பஜனைகள். நடைபெற்றது .விநாயகர் சதுர்த்தி காலையில் சிறப்பு பூஜை நடைபெற்று, நான்கு ஜோடி தம்பதிகளுக்கு இலவச திருமணமும் நடைபெற்றது .

விநாயகர் சதுர்த்தி திருநாளில் திருக்கோயிலில் இருந்து தீப ஆராதனை வழிபாட்டுடன் ஊர்வலமாக ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற சிலைகள் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை சங்கரன்கோவில் மூக்கு வழியாக ஐஎன்டிசி நகர் சென்று அங்கே சிலைகள் கரைக்கப்பட்டன .வழி நெடுகிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் , பக்தர்களை காட்டிலும் ஏராளமான போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News