திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு சிறை

திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து சார்பு ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-06-01 07:08 GMT

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் கடந்த 2022ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் தர்மராஜன், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த வெங்கடேஷனை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வெங்கடேஷ், சார்பு ஆய்வாளர் தர்மராஜனை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து சார்பு ஆய்வாளர் தர்மராஜன், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, சார்பு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி வெங்கடேசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News