பள்ளியில் காய்கறித் தோட்டம்: அசத்தும் மாணவர்கள்

Vegetable Garden In School ஏங்க...பள்ளிக்கு கல்வி கற்க மட்டும் நாம் செல்லவில்லைங்க..பல பழக்க வழக்கங்கள், ஒழுக்க நடைமுறைகள் மற்றும் வாழ்வியலுக்கு தேவையான அனுபவக்கல்வி ஆகியவற்றை போதிப்பதுதான் பள்ளி...படிச்சு பாருங்க...;

Update: 2024-01-31 09:08 GMT

காரியாபட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் விளைந்த காய்களை சேகரிக்கும் மாணவர்கள். 

Vegetable Garden In School

காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்  அமைத்து  அசத்தும் மாணவர்களை  பலரும் வெகுவாக பாராட்டினர். 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள் ளி இயங்கி வருகிறது. அரசு பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக வளாகத்தை சுற்றி ஏராளமான மரங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தின விழாக்க ளில் மாணவர்களிடம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களாகவே, முன்வந்து மரங்களை வளர்த்து வருகின்றனர்.. மேலும் , மூலிகைகளின் மருத்துவ குணங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாதிரி மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நான் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் காய் கறிகள், கீரை வகைகளை வளர்ப்பதற்காக காய்கறி தோட்டம் அமைக்க ப் பட்டது இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பள்ளியில் இயங்கும் சத்துணவு மையத்துக்கு வழங்கப் பட்டு வருகிறது. மாணவர்களின் இந்த புது முயற்சிக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இது போல் பணிகளை அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த மாநில கல்வி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News