கோயில் வருடாபிஷேக விழா அழைப்பிதழ்:முன்னாள் அமைச்சருக்கு வழங்கல்

Temple Annual Function Invitation சிவகாசியில், பிரசித்தி பெற்ற கோவில் வருஷாபிஷேக விழாவையொட்டி முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழை நிர்வாகிகள் வழங்கினர்.;

Update: 2024-01-21 13:30 GMT

கோயில் வருடாபிஷேக விழா அழைப்பிதழ், முன்னாள் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

Temple Annual Function Invitation

தமிழகத்தில் தற்போது  38மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. ஒரு சில ஊர்களில் தற்போது புதியதாக கோயில்களும் கட்டப்பட்டுகிறது. அக்காலத்தில் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொல்வர். காரணம் கோயிலுக்கு செல்வதால் நம் வாழ்க்கையின் பல நெறி முறைகளை அந்த பக்தி மார்க்கம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அதேபோல் பல கிராமங்களில் எல்லை தெய்வம் என கோயில்கள் இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.இந்த ஒவ்வொரு கோயிலின் துவக்க தினத்தினை   வருடாபிஷேக விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஸ்ரீதுர்க்கைபரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், வருஷாபிஷேக விழா அழைப்பிதழை, விழா கமிட்டி நிர்வாகிகள் வழங்கினர். உடன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கணேசன், சிவகாசி கிழக்கு பகுதி நிர்வாகி ஆட்டோ பெரியசாமி உட்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News