நடப்பு கல்வியாண்டில் ரூ.120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு: மாணிக்கம்தாகூர் எம்பி
மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள், நிலுவையில் இருக்கும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்பி மாணிக்கம்தாகூர் பேசினார்.;
மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள், நிலுவையில் இருக்கும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்பி மாணிக்கம்தாகூர் பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு பணிகள், நிலுவையில் இருக்கும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. படித்த இளைஞர்களுக்கு, படிப்பிற்கேற்ற வேலையை மத்திய அரசு வழங்கவில்லை. இதற்கு சாட்சியாக அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு இது வரை 46 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பதே சான்று. வேலையில்லா திண்டாட்டம் அந்தளவிற்கு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 4 ஆயிரத்து, 800 மாணவர்களுக்கு 106 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் 120 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கல்வித்திருவிழா நடத்தப்பட்டு, கல்விக்கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.