சிவகங்கை: சிறுமியை பலாத்காரம் செய்தவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

சிவகங்கை அருகே மகள் உறவு சிறுமியை பலாத்காரம் செய்து காம கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.;

Update: 2021-05-28 15:02 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, சொந்த உறவினரால் மிகக் கொடூரமான பாலியல் கொடூரம் நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த (14) வயது சிறுமி, தனது தாயாருடன் வசித்து வருகிறார். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் இயங்காததால் சிறுமி வீட்டில் இருந்து வந்தார்.

தாயார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். அவர் ஆலைக்குச் சென்றவுடன், தாயாரின் தங்கை கணவன் ராமர் (28) என்பவன், சிறுமியின் வீட்டிற்கு வந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். சிறுமிக்கு சித்தப்பா முறை உறவு என்பதால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவி்ல்லை.

இதனை சாதகமாக பயன்படுத்திய கொடூரன் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளான். சில மாதங்களுக்கு முன் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமான விசயம் தெரிய வந்தது. சித்தப்பா மிரட்டலுக்கு பயந்து, சிறுமி இது குறித்து யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் நிலை குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் மகளிர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். தனக்கு நடந்த கொடூரம் குறித்து, போலீசாரிடம் சிறுமி வாக்குமூலம் கொடுத்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சிறுமியை மிரட்டி கொடூரமாக சீரழித்த ராமரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News