சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி தனசேகர னுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது;
அருப்புக்கோட்டை அருகே, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்குபடி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலி வேலை பார்த்து வரும் தனசேகரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 5 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், தனசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி தனசேகரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.