காரியாபட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தூய்மைக்கான விழிப்புணர்வு
விருதுநகர் மாவட்ட காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சித்தலைவர் செந்தில் தலைமை வகித்தார்;
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
காரியாபட்டியில், நகரங்களின் தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி மாநில ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி சேர்மன் செந்தில் தலைமை வகித்தார். தமிழக அரசு பேரூராட்சிகளின் ஆணையாளர் டாகடர். செல்வராஜ் விழிப்புனர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணியில், சேதுபொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன் . செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.