ராஜபாளையம் சாஸ்தா கோவில் முப்பெரும் விழா

Rajapalayam Sastha Temple Function விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் நடந்த முப்பெரும் விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2023-12-26 09:36 GMT

ராஜபாளையம் சாஸ்தா கோவிலில் முப்பெரும் விழாவையொட்டி  சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

Rajapalayam Sastha Temple Function

மார்கழி பிறந்தாலே மாநிலம் முழுவதுமே அனைத்து மாவட்டங்களிலும்  ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகம் நடந்தேறும். அந்த வகையில் இந்த ஆண்டும்  ஆங்காங்கே ஆன்மீக சம்பந்தப்பட்ட கருத்தரங்கு, பேச்சரங்கு, பட்டிமன்றம் போன்றவை அவ்வூரிலுள்ள முக்கிய திருத்தலங்களில் நடந்து வருகிறது. 

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில்   கடுங்குளிரில்  மார்கழிபஜனை பாடுவோரின் எண்ணிக்கையானதுகணிசமாக உயர்ந்து வருகிறது. குளிர் குளிர் என வீட்டில் முடங்கிக்கொண்டிருந்தவர்களும் தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது  தெய்வத்தின் அருள் கடாட்சம் என்று கூட சொல்லலாம். இதுபோல் அதிகாலை நேரத்தில்  ஆன்மீக சேவை செய்வோருக்கு உடல் ஆரோக்யத்திலும் எந்த பாதிப்பு வராத வகையில் தெய்வம் துணை நிற்பதாக  அவர்கள் கருதுவதால்தான் இந்த சேவைகள் இன்று வரை தொடர்கிறது. 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஞானசாஸ்தா ஐயப்ப பக்தர்களின் 22-- வது ஆண்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது. மூலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மூன்று நாட்களாக நடைபெற்றது.

முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலை நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கொரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில், கலந்து கொண்ட பெண்கள் கீர்த்தனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாள் சனிக்கிழமை இரவு அனைத்து ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜையும், நாம சங்கீர்த்தன பஜனையும்,மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்கராம் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை, ஸ்ரீசடை உடையார் சாஸ்தா திருக்கோவில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News