போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசிய மாணவர் படை மாணவர்கள் மரியாதை
Tribute To Soldiers - போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் மரியாதை செய்யப்பட்டு வருகிறது;
போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ராஜபாளையத்தில் மரியாதை
Tribute To Soldiers - போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ராஜபாளையத்தில் மரியாதை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணராஜா. ராணுவ வீரரான இவர், கடந்த 1965ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணம் அடைந்தார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா, அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. போரின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் 5வது தமிழ்நாடு தேசிய மாணவர் படை சுபேதார் முருகன் தலைமையில், தேசிய மாணவர்படை மாணவர்கள், போரில் வீர மரணமடைந்த நாராயணராஜா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நாராயணராஜாவின் மகன் சந்திரசேகர், மகள்கள் ராஜம், கவுசல்யா, ஜெயந்தியிடம் நினைவு பரிசுகளை தேசிய மாணவர் படை அதிகாரிகள் வழங்கினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2