காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
Tree Project -தமிழ்நாட்டில் வன மற்றும் மரப்பரப்பினை 33 % உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது
Tree Project -விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், இல்லங்கள் தோறு மரம் நடும் திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநிலம் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. தமிழ்நாட்டில் வன மற்றும் மரப்பரப்பினை 33 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையினை செயல்படுத்துவதற்கு வரும் ஆண்டுகளில் பசுமை தமிழகம் திட்டம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் சுமார் 13.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதிக்கு வெளியே உள்ள அனைத்து வகையான நிலங்களிலும் சுமார் 261 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரூ.61 ஆயிரம் கோடி வருவாய் அரசு மற்றும் மரம் வளர்ப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு ஈர நிலங்கள், நிலநீர் கழிவுகளின் சுத்திகரிப்பான்களாக விளங்கி நீராதாரத்தை முறைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பதால் முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஈர நிலம் இயக்கம் ஏற்படுத்தப்படும். ஈர நிலங்கள் பழம்பெரும் பண்பாட்டில் மிக்க முக்கியத்துவம் வகிப்பதால் குறைந்தது 100 ஈர நிலங்களை தேர்வு செய்து, அவற்றின் இயற்கை சூழலை மீள உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.150 கோடி செலவிடப்படும்.தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் லட்சியமான 'பசுமை தமிழ்நாடு' திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
பசுமை தமிழகம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் , விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக இல்லங்கள் தோறும் மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்த ஏற்பாடு செயயப்பட்டது.
இதன் துவக்கவிழா, காரியாபட்டி கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது, பேரூராட்சித்தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிறுவனர் பொன்ராம் வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இல்லத்தரசிகள், மற்றும் குழந்தைகளிடம் மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ,பேரூராட்சி துணைத்தலைவர் ரூபி சந்தோசம், ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்லம், கண்ணன், பேரூராட்சிக்கவுன்சிலர்கள் வசந்தா, சரஸ்வதி, முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன் , எஸ்.பி. எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவு ண்டேசன் நிர்வாக இயக்குனர் ராணி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், சமுத்திரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மங்களேஸ்வரி வழக்கறிஞர் செந்தில்குமார், மனித பாதுகாப்பு குழு நிர்வாகி பிரின்ஸ் நுகர்வோர் பாதுகாப்பு குழு அமைப்பாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டரை .: மேலும் ,கிரின் பாண்டேன் நிறுவனர் கூறியதாவது:
தமிழக முதல்வரின் உன்னதமான பசுமை தமிழகம் திட்டத்தை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக செயல்படுதத்தப்படும். பேரூராட்சி வார்டு கரன்சிலர்கள் ஒத்துழைப்போடு வாரம் ஒரு நாள் விடுமுறை தினத்தன்று வீடுகள் தோறும் மக்களை சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப் படும்.என்று தெரிவித்தார். கிரீன் பவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2