இராஜபாளையத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இராஜபாளையம் தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை;

Update: 2022-08-30 08:30 GMT

சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வரும் ஒபிஎஸ்-க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வரும் ஒபிஎஸ்-க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக  எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் எம்.எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

வருகிற 1ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக தெற்கு நகர பொறுப்பாளர் கிராதி கோவிந்தராஜ், நகர பொறுப்பாளர் வடக்கு முருகதாஸ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகப்பா, பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அழகு மீனாராஜ். முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் கதிரவன் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில்,  கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் -க்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும். இரட்டை இலையும் அவர் பக்கம் தான் கட்சியும் அவர்தான் வெளியே சென்றவர்கள் விரைவில் கட்சியை நாடி வருவார்கள் என்று பேசினார் .அனைவரும் இந்த கருத்தை எடுத்துரைத்து ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News