இராஜபாளையம் அருகே தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிடத்திறப்பு விழா
சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து ரூபாய் 15.47லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது;
இராசபாளையம் அருகே கோட்டைபட்டி கிராமத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.:
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொருக்காம்பட்டி ஊராட்சி கோட்டைபட்டி கிராமத்தில் சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து ரூபாய் 15.47லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சிங்கராஜ், குழந்தைகள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ,அவர், பள்ளி குழந்தைகளுடன் கலந்து உரையாடினார். குழந்தைகள் அனைவரும் புதிய கட்டிடம் அமைத்து கொடுத்தற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து, அந்த பகுதி மக்களிடம் குறைகளைகேட்டறிந்தார்.மிக விரைவில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி கூறினார்.
உடன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார்,சிவகுமார் (கி.ஊ) பணி மேற்பார்வையாளர் ஞானகுரு ,உதவி பொறியாளர் சசிகலா, ஒன்றிய துணைத் தலைவர் துரைகற்பகராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சரவணன முருகன், வைஸ் முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி தங்கராஜ் மற்றும்,கிளை கழக செயலாளர்கள் சுந்தர்ராஜ், மூக்கையா, சந்தன மாரியப்பன்,தங்க மாரியப்பன், சுரேஷ் குமார், தங்கராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.