விருதுநகர் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் பணம் திருட்டு
திருட்டு நடைபெற்ற வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப் பகுதியின் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்
விருதுநகர் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் கவிதா, தனது மகளுடன் வசித்து வருகிறார்.
இவரது மகள் விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். நேற்று மாலை வீட்டிற்கு வந்த கவிதா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கவிதா, சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தனர்.திருட்டு நடைபெற்ற வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.