மின்சாரம் தாக்கி இறந்த மற்றும் காயமடைந்தவர் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆறுதல் கூறினர்;

Update: 2022-09-02 09:45 GMT

தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேநடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் உயிழிந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிதி உதவி வழங்கினர்.
இராஜபாளையம் அருகே சொக்கனாமுத்தூர் பகுதியில், விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர்  ஊர்வலம் நிறைவடைந்ததையடுத்து, சிலைகளை கொண்டு சென்ற வண்டியுடன் இரவில் ஊருக்குள் திருப்பி வரும் போது தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின் வயரில் எதிர்பாராத விதமாக வண்டி சிக்கியதால் முனீஸ்வரன், மாரிமுத்து, சேவுகபாண்டியன், செல்ல பாண்டியன், முப்பிடாதி ஆகிய ஐவரும் காயமடைந்தனர்.இதில், முனீஸ்வரன், மாரிமுத்து இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், உயர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து,காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர்கள் விபத்தில் மரணம் அடைந்த இருவரின் உடல்களுக்கும்  மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News