இராஜபாளையத்தில் மகாதேவ அஷ்டமி: இலையில் உருண்டு பக்தர்கள் வழிபாடு

உலக நன்மைக்காகவும் கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடவேண்டும் என வேண்டி எச்சில் இலைகள் மீது உருண்டு வழிபட்டனர்

Update: 2021-11-28 09:30 GMT

இராஜபாளையத்தில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டுஉலக நன்மை வேண்டி எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சனம்

இராஜபாளையத்தில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா மற்றும் அன்னதானம் ,உலக நன்மை வேண்டி எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சனம் செய்து வழிபாடு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் சர்வ சமுத்திர அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை மாத மகாதேவாஷ்டமிய முன்னிட்டு, அதிகாலையிலே நடை திறந்து மூலவர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், தேன்,ஆகிய 16 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னத்தால் சிவலிங்கம் உருவம் உருவாக்கப்பட்டு அதற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.அதன் பின்னர், பொதுமக்களுக்கு மகாதேவாஷ்டமி அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சாப்பிட்ட பின்பு, அந்த எச்சில் இலைகளில், கோவில் அர்ச்சகர்கள், உலக நன்மைக்காகவும் கொடிய நோயான கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் விடுபடவேண்டும் என வேண்டி எச்சில் இலைகள் மீது உருண்டு அங்க பிரதட்சனம் செய்தனர்.விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News