ராஜபாளையம் ராமலிங்கேஸ்வர ஆலயத்தில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் ஸ்ரீ பர்வதவர்த்தினீ சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி கோவில் குடமுழுக்கு நடைபெற்றது;

Update: 2022-07-07 08:30 GMT

ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் ஸ்ரீ பர்வதவர்த்தினீ சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி கோவில் குடமுழுக்கு நடைபெற்றது

ராஜபாளையத்திலுள்ள ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 12 வருடங்களுக்கு பிறகு புதன்கிழமை அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தினமும் நடைபெற்றது. காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து புதன்கிழமை காலையில் ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ, ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சுவாமி, அம்பாள்மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கோவில் பரம்பரை அறங்காவலரும், ராம்கோ குழுமத் தலைவருமான பி.ஆர். வெங்கட்ராமராஜா, அவரது மகன் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News