ராஜபாளையத்தில், அதிமுக சார்பில் ஜெ. நினைவு நாள் ஊர்வலம்..!
ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர, ஒன்றிய, பேரூர் கழக அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் நகர செயலாளர்கள் முருகேசன், பரமசிவம் ஆகியோர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஜெயலலிதாவின் உருவப்படம் தாங்கிய வாகனம் முன்னே செல்ல அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அம்மா உணவகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் என்.எம்.கிருஷ்ணராஜ், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மற்றும் பாபுராஜ் , ஆந்திரா குமார்,திருப்பதி , யோக சேகரன் , செல்லப்பாண்டியன், செல்வராஜ் , லிங்கா முருகன் , கணேசன், அழகாபுரியான், வைரமுத்து,மகளிர் அணியினர், லீலா, ராணி, துரைச்சி, சுபா,மற்றும் கழக அதிமுக கட்சித் தொண்டர்கள் , மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.