ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னகரம். ஜவகர் மைதானம். பழைய பேருந்து நிலையம். பூபதி ராஜா பேங்க் முன்பாகவும். தளவாய்புரம் பஸ் நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கு நீர். மோர். தண்ணீர்பழம். பப்பாளி. நுங்கு. சர்பத். போன்ற பழங்களை விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் மாநில கழக எம்ஜிஆர் மன்றத் துணைச் செயலாளர் பாபுராஜ். அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ். நகர செயலாளர்கள் துரை முருகேசன். பரமசிவம். ஒன்றிய செயலாளர்கள். அழகாபுரியான். குருசாமி. நவரத்தினம். மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.