ராஜபாளையம் பகுதிகளில் கனமழை: சாலையாேர வியாபாரிகள் அவதி
ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழையால் நகர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. மேலும் நடைபாதை வியாபாரிகள் தொழில் முடங்கியது.;
ராஜபாளையம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக நகர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து. பண்டிகை காலத்தில் பெய்த பருவ மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள் தொழில்கள் முடங்கியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முகவூர், சேத்தூர், முறம்பு, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
மேலும் இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில ஆற்று வெள்ளம் போல் சாலைகள் நீர்ப்பெருக்கெடுத்து ஓடியதால் தண்ணீரில் தத்தளித்தது.
வடகிழக்கு பருவமழையால் நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முடங்கினர். மேலும் சாலைகளில் ஆற்று நீர் பாேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
பருவமழை காலத்தில் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்னும் இரண்டு தினங்களில் பண்டிகை காலம் என்பதால் சாலை ஒர வியாபாரிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.