விருதுநகர் மாவட்டத்தில் பலத்த மழை!
விருதுநகர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளது.
இராஜபாளையத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை நகராட்சியில் அலட்சியத்தால் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், காலையில் இருந்தே சாரல் மலையுடன் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது மழை பெய்து வந்த நிலையில் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நல்ல மழை பெய்ததால், சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சென்றதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதி உள்ளானர்கள்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு , ஜவுளிக்கடைகளில் புத்தாடை எடுப்பதற்காக கூட்டம் அலைமோதிய நிலையில் , பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். நகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்காமலும் கழிவுநீர் ஒடைகளை தூர்வாராமல் இருப்பதுமே மழைநீர் தேங்குவதால் இது போன்ற சிரமங்கள் ஏற்படுகிறது இதை சரி செய்ய வேண்டுமென பல அமைப்புகளும் கட்சிகளும் போராட்டங்கள் நடத்திய நிலையில் நகராட்சி நிர்வாகம் மிகுந்த அலட்சியத்துடன் நடந்து கொள்வது பொது மக்களுக்கு பலநோய்களை ஏற்படுத்தும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.