இராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது
இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனை யில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்தனர்
இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்த ஒரு நபரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு போது,
சேத்தூர் ஊரக காவல் நிலையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கன்னியராஜ் (30 ). என்ற வாலிபரை சோதனை செய்து பார்த்தபோது 50 கிராம் கஞ்சா வைத்துள்ளார். தொடர்ந்த, அவரிடம் விசாரணை செய்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசி வந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வாளர் அனந்தகுமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கன்னியராஜ் மீது, ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்ததாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இது போன்ற குற்றங்கள் ஈடுபட்டால் குண்டாஸ் சட்டம் போடப்படும் என காவல்துறை எச்சரித்தனர் .கன்னியராஜ்க்கு யாருடன் தொடர் உள்ளது என்பதை குறித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தீவிர விசாரணை செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.