விருதுநகரில் முன்னாள் படைவீரர் நலக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம் நாளை டிச.28 ம் தேதி நடைபெற உள்ளது;

Update: 2023-12-27 12:45 GMT

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்.

விருதுநகரில் நாளை, முன்னாள் படைவீரர் குறை தீர் கூட்டம் நாளை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம், நாளை 28ம் தேதி (வியாழன் கிழமை) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்..

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீர விருது பெற்றவர்கள், போரில் உயிர் தியாகம் செய்தவர்களை சார்ந்து இருப்பவர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணி புரிபவர்களை சார்ந்து இருப்பவர் களுக்கான குறைதீர் கூட்டம், நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த குறைதீர் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்து இருப்பவர்கள் குறைகள் எதுவும் தெரிவிக்க விரும்பினால், தங்களது கோரிக்கை மனு மற்றும் அடையாள அட்டை நகலுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்கள் கொடுத்து உரிய பயன டையலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார்..

Tags:    

Similar News