ராஜபாளையத்தில் காவல்துறையின் புதிய செயலியை அறிமுகம் செய்த டிஎஸ்பி

ஸ்மார்ட் காவலன் செயல்பாடுகளை ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் பணியில் கண்காணிப்பார்கள்

Update: 2022-12-21 08:45 GMT

ஸ்மார்ட் காவலன் என்ற புதிய செல்போன் செயலியை ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி அறிமுகம் செய்து வைத்தார் 

குற்ற செயல்கள் குறைக்கும் விதமாக காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலியை ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர்  போலீஸாருக்கு   அறிமுகம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில், ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக  ஸ்மார்ட் காவலன் என்ற புதிய செல்போன் செயலியை ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து தமிழ்நாடு அரசும் காவல் துறையும் பல்வேறு விதங்களில் செயல்பட்டு வருகிறது அதன்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எஸ். ஓ. எஸ் .காவலன் செயலி மக்கள் மத்தியில் பிரபலமாக செயல்பட்டு வருகிறது.மேலும், பள்ளி கல்லூரி சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டு வரும் ஆபரேஷன் 2.0 உட்பட பல்வேறு நிலைகளில் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக , தற்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலன் என்ற செயலையும் இதன் வரிசையில் இணைந்துள்ளது.ஸ்மார்ட் காவலன் என்ற செயலை மூலம் குற்றச் சம்பவங்கள் பல்வேறு வகையில் தடுக்கப்பட வழிவகை செய்யும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் காவலன் செயலி செயல்பாடுகளாக ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவலர்கள் சுழற்சி முறையில் மூன்று பிரிவுகளாக 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் குற்ற பின்னணி நடைபெறும் பகுதிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் உட்பட பல்வேறு இடங்களில் பணி செய்து வருவர்.இவ்வாறு, பணி செய்யும் காவலர்கள் இந்த ஸ்மார்ட் காவலன் செயலி மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இணைப்பில் இருந்து பணி செய்து வருவர்.

குற்றம் மற்றும் குற்றப் பின்னணி நடைபெற்ற இடங்களில் இருந்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்த உடன், உயர் அதிகாரிகள் இந்த ஸ்மார்ட் காவலன் செயலி மூலம் குற்றப் பின்னணி நடைபெற்ற இடத்திற்கு அருகில் பணி செய்து கொண்டிருக்கும் காவலரை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குற்ற சம்பவங்கள் மேலும் நடைபெறா வண்ணம் தடுக்க முடிவதோடு,

காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்து காவலர்கள் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு குற்றப் பின்னணி நடைபெற்ற இடத்திற்கு செல்லும் நேரம் கால அவகாசம் இந்த செயலி மூலம் குறைக்கப்படும் எனவும்.இதன் மூலம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துபணியில் ஈடுபட்டு வருவார்கள்.காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் குற்ற சம்பவங்கள் குறையும் என்றார் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி ப்ரீத்தி . பின்னர்  ஸ்மார்ட் காவலன் செயலியை பொதும மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.

Tags:    

Similar News