இராஜபாளையம் அருகே அமைச்சர் காரை மறித்து திமுகவினர் வாக்குவாதம்

தங்கள் ஊரை பாகுபாடு பார்த்து புறக்கணிப்பதாகவும், கட்சியினரை மதிப்பதில்லை எனவும் திமுகவினர் வேதனையுடன் தெரிவித்தனர்;

Update: 2021-12-04 23:45 GMT

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காரை மறித்து வாக்குவாதம் செய்த திமுகவினர் 

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காரை மறித்து திமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் ஆய்வு செய்ய ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வந்திருந்தார். உடன், காரில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சென்றதால், தங்கபாண்டியன் ஊருக்குள் வரக்கூடாது என கூறி திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அமைச்சர் காரை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, திமுகவினர் கட்சியை சேர்ந்த நபர்கள் கூறும்போது: சட்டமன்ற உறுப்பினர் இன்றைய நிகழ்ச்சிகள் குறித்து கிளை செயலாளர் உட்பட கட்சியினர் யாருக்கும் சரியான தகவல் வழங்கவில்லை எனவும், தங்கள் ஊரை பாகுபாடு பார்த்து புறக்கணிப்பதாகவும், கட்சியினரை மதிப்பதில்லை எனவும் திமுகவினர் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அமைச்சரின் காரை கட்சியினர் மறித்ததால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News