திமுக சார்பில் இரு தம்பதி வெற்றி: ராஜபாளையம் நகராட்சியில் சுவாரஸ்யம்
ராஜபாளையம் நகராட்சி தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு தம்பதியினர் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றனர்.;
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டு பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 33 வார்டுகளில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று திமுக நகராட்சியைக் கைப்பற்றியது. இதில் சுவாரசியமான நிகழ்வு என்னவென்றால் திமுக சார்பில் பொதுமக்கள் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் இரண்டு தம்பதியினரும், அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
அவ்வகையில், 29வது வார்டு கீதா மற்றும் 30வது வார்டு ராதாகிருஷ்ண ராஜா என்ற தம்பதியினரும், 6வது வார்டில் போட்டியிட்ட பவித்ரா ஷியாம் ராஜா மற்றும் 40 வது வார்டில் போட்டியிட்ட ஷியாம்ராஜா தம்பதியினரும் அதிமுகவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றனர்.
பொதுமக்கள் சேவையில் ஈடுபாடுள்ள கணவன் மனைவி இரண்டு தம்பதியினரும் ராஜபாளையம் பகுதி மக்கள் நல்வாய்ப்பு கொடுத்து தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் வெற்றி வாய்ப்பை பெற்ற தம்பதியினர் தங்களை தேர்ந்தெடுத்த வார்டு பகுதி மற்றும் ராஜபாளையம் நகராட்சியையும் மேம்படுத்த பொதுமக்களுக்காக பணியாற்றுவோம் என தெரிவித்தனர்.