காரியாபட்டி ஒன்றியத்தில் நிறைவடைந்த பணிகள்: நிதி அமைச்சர் திறப்பு
காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய கலையரங்கம், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்;
காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய கலையரங்கம், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் கீழ இடையங்குளம் , குண்டு குளம், வல்லப்பன் பட்டி ஆகிய ஊர்களில் கலையரங்க கட்டிடங்களும், உவர் குளத்தில் நியாயவிலைக்கடை கட்டிடமும் அமைக்கப்பட்டது. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்ட க்கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் , பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி,
மாவட்ட மாணவர் அணி துணை, துணை அமைப்பாளர் கருப்பு ராஜா, சுற்றுச் சூழல் அணி மருது, ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதி சிவக்குமார், அல்லாள பேரி தி.மு.க நிர்வாகிகள் நல்லதம்பி, சலுகை வல்லப்பன்பட்டி திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காரியாபட்டியில் இயங்குகி வருகிறது.