ராஜபாளையத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா

ராஜபாளையத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடைபெற்றது.;

Update: 2023-10-31 08:42 GMT

ராஜபாளையத்தில் 116வது தேவர் ஜெயந்தி விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் நகர ஒன்றிய அதிமுக சார்பில் தென்காசி சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச்சிலைக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் நகர செயலாளர்கள் பரமசிவம் (தெற்கு) வழக்கறிஞர் முருகேசன்(வடக்கு) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் அழுகுராணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி, நகர் மன்ற துணைத் தலைவி கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக சார்பில் முன்னாள் தொழில் பிரிவு செயலாளர் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News