இராசபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு
இராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட முயற்சி. 200 லிட்டர் சாரய ஊறல் அழிப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப் பகுதியில் ஊறல் போட்டு வைத்திருந்த 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் சேத்தூர் காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.
இராஜபாளையம் அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காசிபாண்டியன் (வயது 44) கள்ளச்சாராயம் விற்பனைக்காக சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு பேரல்களில் சாராய ஊறல் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடுத்து எஸ் ஐ மகாலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 200 லிட்டரை ஊறலை அழித்தார். மேலும் பயன்படுத்திய சில பொருட்களை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற காசிபாண்டியனை தேடிவருகின்றனர் .
கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடி சென்று வருகின்றனர் . விற்பனைக்காக இதுபோன்ற அங்கங்கே ஊறல் போட்டு கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.