காரியாபட்டி பேரூராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு
பேரூராட்சிகளின் மதுரை சிவகங்கை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்;
காரியாபட்டி பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
காரியாபட்டி பேரூராட்சியில் புதிய தலைவராக செந்தில் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற பின்பு, பல்வேறு மக்களின் அடிப்படை தேவைகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் மற்றும் அரசு திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகளின் மதுரை சிவகங்கை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சித் தலைவர் செந்தில், துணைத்தலைவர் ரூபி சந்தோசம், உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் . முன்னதாக , ஆய்வு பணிக்கு வருகை தந்த உதவி இயக்குநரை பேரூராட்சித்தலைவர் செந்தில் வரவேற்றார்.