விருதுநகரில் பிபின் ராவத் மறைவுக்கு அதிமுகவினர் அஞ்சலி

விருதுநகரில், மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-12-10 01:00 GMT

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர். 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில், பண்ணையார் ஆர்ச் முன்பு, நகர அதிமுக சார்பில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத்,  அவரது மனைவி மற்றும், 11 ராணுவ வீரர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து,  கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, அதிமுகவினர் வீரவணக்கம் என்ற கோஷங்கள் எழுப்பினர். மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில்,  அதிமுக வடக்கு நகரச் செயலாளர் துரை முருகேசன், தெற்கு நகரச் செயலாளர் பரமசிவம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், இதில்  கலந்து கொண்டு முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News