சிவகாசியில் அதிமுக 32 வது ஆண்டு தொடக்க விழா

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செய்தனர்

Update: 2023-10-18 09:45 GMT

சிவகாசியில், அதிமுக ஆண்டு விழாவை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

சிவகாசியில், அதிமுக கட்சியின் 52ம் ஆண்டு தொடக்க விழா முன்னாள் அமைச்சர் தலைமையில், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், அதிமுக கட்சியின் 52ம் ஆண்டு தொடக்க விழாவினை அதிமுக கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். சிவகாசியில், காமராஜர் சிலை அருகே அதிமுக கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு, அதிமுக கட்சியினர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர். அங்கிருந்த பொது மக்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், சாத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், சிவகாசி யூனியன் முன்னாள் சேர்மன் வேண்டிராயபுரம் சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிமுக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக வரலாறு...திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்.) 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட திராவிடக் கட்சி இது. சி. என். அண்ணா துரையின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆரால் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.

9 பிப்ரவரி 1989 முதல் 5 டிசம்பர் 2016 வரை, அஇஅதிமுக பொதுச் செயலாளராக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமை வகித்தார். மேலும் 2016இல் அவர் இறக்கும் வரை தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். 21 ஆகஸ்ட் 2017 முதல் 23 ஜூன் 2022 வரை, இக்கழகம் இரட்டை தலைமையின் கீழ் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் முறையே கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாள ராகவும் தலைமை வகித்தனர்.

11 ஜூலை 2022 முதல், அஇஅதிமுக பொதுச் செயலாளராக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தலைமை வகித்து வருகிறார்.கழகத்தின் தலைமைச் செயலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வி.பி. இராமன் சாலையில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான வி. என். ஜானகி இராமச்சந்திரனால் 1986ஆம் ஆண்டு கழகத்திற்கு அக்கட்டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News