விருதுநகரில் ஆதார் காருடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் முகாம்
விருதுநகரில் ஆதார் காருடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் பெரிய பேராலி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், வாக்காளர் விபரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும் போது, வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் சரி செய்தல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளரை உறுதி செய்தல், ஒரு வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுத்தல் மற்றும் வாக்காளர்களின் வாக்கை உறுதி படுத்தும் காரணங்களுக்காக வாக்காளர் அட்டையுடன் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்காளரிடம் இருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணினை https://www.nvsp.in/என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ தங்களது வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்- 6B –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
ஆய்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்