காரியாபட்டி; நூற்பாலை தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்
காரியாபட்டி அருகே நூற்பாலை தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
நூற்பாலை தொழிலாளர்களுக்கான மனநல மேலாண்மை பயிற்சி முகாம் காரியாபட்டியில் நடந்தது.
நூற்பாலை தொழிலாளர்களுக்கான, மனநல மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ,ஸ்பீச் நிறுவனம் சார்பாக, காரியாபட்டி, திருச்சுழி பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை தொழிலாளர்களுக்கான, பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் பெண் தொழிலாளர்களுக்கான மனநல மேலாண்மை பாலியல் சம்பவங்களுக்கு, புகார் கொடுப்பது பற்றியும்,பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண்களின் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்க்கப்பட்டது.
ஸ்பீச் நிறுவன திட்ட மேலாளர் சுரேந்தர் பயிற்சித் திட்டங்கள் குறித்து பேசினார்.
கள ஒருங்கிணைப்பாளர்கள் முத்து செல்வி , தீபிகா, ராஜ்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.