சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2023-04-21 16:37 GMT

தண்டனை அடைந்த பாதிரியார் போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜபாளையத்தை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா. இவர், தேவாலயம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், தேவாலயத்திற்கு வந்த மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக கூறி, சிறுமின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

இந்நிலையில், பாதிரியார் ஜோசப் ராஜா குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். இதனையடுத்து, பாதிரியார் ஜோசப் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News