விருதுநகர் அருகே தாய், மகள், பேத்தி விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர் அருகே, தாய் - மகள் - பேத்தி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-04-27 06:21 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரியை சேர்ந்த அடைக்கலம் (65). கணவரை இழந்த அவருக்கு, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகள் முனியம்மாள் முஷ்டக்குறிச்சி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்து, அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு முனியம்மாள் தன் அண்ணன் மகன் பொறியியல் பட்டதாறியான முத்துகுமாருக்கு, திடீரென 16 வயது மகள் ஜெயலலிதாவை திருமணம் செய்து வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அடைக்கலம் தன் மகள் முனியம்மாளுடன் முஷ்டக்குறிச்சி வீட்டில் வந்து தங்கியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மகள் ஜெயலலிதாவை மருமகன் முத்துகுமார் முஷ்டக்குறிச்சியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், மூவரும் வீட்டிற்குள் இறந்து கிடப்பதை அருகில் இருந்தவர்கள் பார்த்து, அதிர்ச்சியடைந்தனர். இதிஅயடுத்து, ஆவியூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் சாந்தி நடத்திய விசாரனையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து அடைக்கலம் மற்றும் அவரது மகள் முனியம்மாள் மற்றும் பேத்தி ஜெயலலிதா (16) ஆகிய மூவரும் இறந்தது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி சகாய ஜோஸ், விசாரணை மேற்கொண்டு மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News