வாகன சோதனையில் ரூ.84 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-03 05:30 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 84 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான மண்டல துணை வட்டாட்சியர் நாகேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதித்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 84 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனம் விருதுநகரில் உள்ள அரசு மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள அதே வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்படுவதாக அதிலிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

எனினும் அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ 84 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடிபட்ட பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான முருகேசனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைத்து அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News