வைகைச்செல்வன் வேட்பு மனு தாக்கல்

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான கோட்டாச்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்

Update: 2021-03-16 09:15 GMT

வரும் சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வேட்புமனுவை தாக்கல் செய்தபின் வேட்பாளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்

பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வைகைச்செல்வன்,  2011ல் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று தலைமை கொறடாவாக முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன் அருப்புக்கோட்டை வளர்ச்சிக்காக அரசு கலைக்கல்லூரி கொண்டுவந்தது மட்டுமல்லாமல் ஐடிஐ கல்லூரி ஆர்டிஓ அலுவலகம் போக்குவரத்து காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டது மேலும் அம்மா பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடமை உருவாக்குவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துள்ளேன்

வீட்டுக்கு ஒரு வாஷிங் மிஷின், குடும்பத் தலைவிகளுக்கு 1500 ரூபாய் ஊக்கத்தொகை, முதியோர் பென்ஷன் உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் உயர்வு, குடும்பத்திற்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் என்று  அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கும் 6 சவரனுக்கு குறைவான தங்க நகை கடனை தள்ளுபடி செய்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.  பயிர் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை விவசாய கடனை ரத்து செய்தால் அரசு இந்தியாவிலேயே அதிமுக அரசு மட்டும்தான்.

நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி 8 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என இலக்கு நிர்ணயித்து அதை நிறைவேற்றி தந்துள்ளோம்.  இந்த சாதனைகளை முன்வைத்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம் என்று கூறினார்.

அருப்புக்கோட்டையில் எந்த தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை மற்றும் சாயப்பட்டறை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் போது நிரந்தரமாக சாயப்பட்டறை பிரச்சினை தீர்க்கும் வகையில் அரசாணை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அருப்புக்கோட்டையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வேன்.  வெளிநாட்டு நிதி உதவியுடன் ஏற்றுமதி தொழில்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.  மேலும் பல்வேறு கட்ட ஆக்கப் பணிகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் முன்னிறுத்தி செயல்படுவேன் என தெரிவித்தார். 

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அமைதியான தொகுதியாக மாறவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் என்னால் முடிந்த பல்வேறு உதவிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செய்து முடிப்பேன் எனவும் கூறினார். 

விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் பற்றி கூறும்போது, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மல்லிகை விவசாயம் அதிக அளவில் உள்ளது. இங்கு சென்ட் பேட்டரி அமைக்க பலமுறை சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன் அந்த பணிகளை துரிதப்படுத்தி சென்ட் பற்றிக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். 

குடி உரிமைச் சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்ற  அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி பாஜகவின் சிடி ரவி கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் இரட்டை குடியுரிமை பெறவேண்டும் என்பது நீண்டகால கொள்கை. இலங்கைத் தமிழர்கள் தாயகத்திலும் வாழ முடியாமல் இலங்கைக்கும் செல்ல முடியாமல் பெரும் துன்பத்தையும் வேதனையையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு முறையான குடியுரிமை இல்லாததால், இருசக்கர வாகனம் கூட வாங்க முடியாது. குடும்ப அட்டை பெற முடியாது. பல்வேறு கட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் இவற்றையெல்லாம் அறிந்து தான் அதிமுக இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அதிமுக அதனுடைய  கொள்கையை தான் முன் வைத்திருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்

மக்கள் எந்த தேர்தல் அறிக்கையின் மீது நம்பிக்கை வைப்பார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் அறிக்கையில் உண்மைத்தன்மை எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள் ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்ற திமுக வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் 5 சவரனுக்கு கீழே உள்ள தங்க நகை கடனை தள்ளுபடி செய்வார்கள் அறிவித்தார்கள் அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.  பொங்கல் பரிசாக அனைவருக்கும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த அதிமுக அரசு அதை அனைவருக்கும் வழங்கியுள்ளது. சொன்னதைச் செய்யும் அரசாக அதிமுக அரசு உள்ளது. 

திமுக ஆட்சியிலும் பொங்கல் பண்டிகை வந்தது ஆனால் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கவில்லை. சொன்னதை செய்த அரசு அண்ணா திமுக அரசுதான். சொன்னதைச் செய்கின்ற அரசாக வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற அரசாக நம்பகத்தன்மை வேண்டும் அந்த நம்பகத்தன்மை அதிமுவிற்கு மட்டுமே உண்டு என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என பேசினார்

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்பதை பற்றி கூறும்போது, கொரோனாவிலே வீட்டில் பதுங்கியவர்கள் கொரோனா நிநியை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது வேதனையாக உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா காலகட்டத்திலேயே சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசை பார்த்து பிற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனே கூறியுள்ளார்

கொரோனா களத்திலே மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து பல்வேறு ஆக்கப் பணிகளைச் செய்தது அதிமுக அரசுதான். இந்தியாவிலேயே டெல்லிக்கு பிறகு கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது அதிமுக அரசுதான் என்றார்

மதுவிலக்கு பற்றி கூறும்போது,  தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என கூறினார்.

Tags:    

Similar News