ஊரடங்கின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக...

Update: 2021-05-11 12:35 GMT

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஊரடங்கின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு நூற்றுக்கணக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா வந்தனர்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது முழு ஊரடங்கின் போது நண்பகல் 12 மணிக்கு மேல் மருந்துக்கடைகள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரியக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஊரடங்கின் முதல் நாளிலேயே அரசின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் சாலைகளில் உலா வந்த வண்ணம் இருந்தனர்

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கெடுபிடி இல்லாததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஊரடங்கை மதிக்காமல் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கார்கள் ஆட்டோக்கள் நகரில் சுற்றி வந்தன ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரியும் பொதுமக்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே

கொரோன பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தி கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்

Tags:    

Similar News