காரியாபட்டி குண்டாற்றில் மணல் கொள்ளை, கண்டுகொள்ளாத அதிகாரிகள்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிய அருகே சொக்கம்பட்டி குண்டாறு பகுதியில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது.
குண்டாற்றில் மணல் அள்ளப்பட்டு முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் குண்டாறு ஆறு போல் தெரியவில்லை. ஆறுக்குரிய அடையாளம் இல்லாமல் காணப்படுகிறது.
ஆறுகள் ஓரங்களில் உள்ள மணல் திட்டுக்கள் மழை பெய்வதால் மழை நீரை உள் வாங்கி மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்து இருந்தது. தற்போது அதையும் அள்ளிவிடுவதால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது.
காரியாபட்டி, திருச்சுழி எல்லையில் சொக்கம்பட்டி உள்ளதால் இப்பகுதி எந்த எல்லைக்குட்பட்டது என்ற குழப்பம் காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை, அதனால் மணல் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.
இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.