அந்தநாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பள்ளியின் பொன்விழா ஆண்டு குடும்ப விழாவில் பழைய மாணவர்கள் சந்திந்து, மலரும் நினைவுகளில் மூழ்கினர்.;
1971-2021 பொன்விழா ஆண்டு குடும்ப விழாவில், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டியில் உள்ள, ஐயப்பன் திருமண மண்டபத்தில், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1971-ம் ஆண்டில் பயின்ற மாணவர்கள், பள்ளினியின் பொன்விழா ஆண்டு குடும்ப விழாவின் ஒருபகுதியாக சந்தித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பழைய மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தபோது, தங்களது பழைய நினைவுகளில் மூழ்கித் திளைத்தனர். அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே என்பதாக, தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்கள் குடும்பத்தினரையும், சக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் வந்திருந்தனர். பழைய மாணவர்கள் பலரும், அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகவும், சிலர் வியாபாரிகளாகவும் இருந்து வருகின்றனர். முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினருக்கு, கோலப்போட்டி, ஞாபகம் ஏற்படுத்தும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.