கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்: தீயணைப்பு துறையினர் மீட்பு

அருப்புக்கோட்டை அருகே மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு.;

Update: 2021-12-01 14:22 GMT

அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு.

அருப்புக்கோட்டை அருகே மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 62 வயது முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டார் வயது 62தனது மகனுன் வசித்து வருகிறார்இவர் மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்து இருந்து வந்துள்ளார்

இந்நிலையில் வடுகர்கோட்டை பகுதியில் உள்ள 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசிப்பவர்கள் உயிருக்கு கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்ற அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் குதித்த முதியவரை வலை கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவருடன் பத்திரமாக ஒப்படைத்தனர் 30 அடி ஆழக் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News