அருப்புக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது.உடனே அப்பகுதியில் இருந்த போலீசார் கைகலப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினரை விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.